டெல்லி: 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியம் ரூ.400-ஆக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. நகர்ப்புறங்களிலும் வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து கடலோர பகுதிகளிலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து மக்கள் விரோத சட்டங்களிலும் திருத்தம் செய்யப்படும். அனைத்து விசாரணை அமைப்புகளும் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.