Tuesday, April 23, 2024
Home » ரூ.1,072 கோடி மதிப்பீட்டில் மணலி, மாதவரம் மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள்: குடிநீர் வாரியம் தகவல்

ரூ.1,072 கோடி மதிப்பீட்டில் மணலி, மாதவரம் மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள்: குடிநீர் வாரியம் தகவல்

by Ranjith

 

சென்னை, மார்ச் 11: மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் விடுபட்ட தெருக்களுக்கான விரிவான பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ரூ.1072.15 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது, என சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் உள்ள வார்டு-17க்கு உட்பட்ட வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம், வார்டு-19க்கு உட்பட்ட மாத்தூர், வார்டு-22, 23க்கு உட்பட்ட புழல் பகுதிகள் மற்றும் வார்டு-25 முதல் 30 வரை உள்ள மாதவரம் பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கான விரிவான பாதாள சாக்கடை திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அதனடிப்படையில், வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர், புழல் பகுதிகளில் 183.38 கி.மீ நீளத்திற்கு 250 மி.மீ முதல் 750 மி.மீ விட்டமுடைய கழிவுநீர் குழாய்கள் மற்றும் 30.57 கி.மீ நீளத்திற்கு 150 மி.மீ முதல் 1000 மி.மீ விட்டமுடைய விசைக் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், 7,087 எண்ணிக்கையிலான இயந்திர நுழைவாயில்கள், 10 உந்து நிலையங்கள், 11 துணை கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு நாளொன்றுக்கு 15.77 மில்லியன் லிட்டர் கழிவுநீர் கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படும்.

இதன்மூலம், 1,004 தெருக்களில் உள்ள குடியிருப்புகளுக்கு 18,581 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 1,30,353 பொதுமக்கள் பயன் பெறுவர். அதேபோல், மாதவரம் பகுதிகளில் உள்ள விடுபட்ட தெருக்களில் 99.83 கி.மீ நீளத்திற்கு 200 மி.மீ முதல் 600 மி.மீ விட்டமுடைய கழிவுநீர் குழாய்கள் மற்றும் 20.44 கி.மீ நீளத்திற்கு 250 மி.மீ முதல் 1000 மி.மீ விட்டமுடைய விசைக் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், 3,914 எண்ணிக்கையிலான இயந்திர நுழைவாயில்கள், 3 உந்து நிலையங்கள், 6 துணை கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம், நாளொன்றுக்கு 13.56 மில்லியன் லிட்டர் கழிவுநீர், கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படும். இதன்மூலம், 21,787 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 1,18,065 பொதுமக்கள் பயன்பெறுவர், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

You may also like

Leave a Comment

17 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi