டெல்லி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக அஜோய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக உள்ள அஜோய் குமாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிகிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக அவினாஷ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.