ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கேட்டு மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் தர்ணா போராட்டம்
திருச்சி, ஆக.14: மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் டபுள்யூ ஹெச்வி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்....
திருச்சி பெல், நார்வே நிறுவனம்; பசுமை ஹைட்ரஜன் திட்டத்தில் ஒப்பந்தம்
திருச்சி, ஆக.14: இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் அதற்கான தொழில்நுட்ப கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில், திருச்சி பெல் மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த ஹைட்ரஜன் துறையுடன் தொடர்புடைய நிறுவனத்துடன் உத்திசார் கூட்டாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு மூலம் இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களுக்கான மின்னாற்பகுப்பு (Electrolysis) மற்றும் எலக்ட்ரோலைசர் அமைப்புகளை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கும், அவற்றின்...
கட்டுமான பணியின்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
திருவெறும்பூர், ஆக.12: திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இப்பணியில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் கீரனூர் புது மேலபுதுவயலை சேர்ந்த கருப்பையா மகன் கலையரசன்...
துறையூர் பகுதியில் கனமழை
துறையூர், ஆக.12: துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரம் கனமழை வெழுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே எல்நினோ தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெப்பத்தினால் சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த...
ஆன்லைனில் ரூ.2.91 லட்சம் மோசடி
திருச்சி, ஆக.12:திருச்சியில் ஆன்லைனில் ரூ.2.91 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி ஜேகே நகர் அமராவதி தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (48), இவர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உடற்பயிற்சி நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இவர் சுப்பிரமணியபுரம் கிளையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், கணக்கு துவங்கி பராமரித்து வருகிறார்....
லாட்டரி விற்றவர் கைது
திருச்சி, ஆக.10: திருச்சியில் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி பீமநகர் பகுதியில் லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஆக.8ம் தேதி பாலக்கரை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பீமநகர் கோரிமேடு அருகே லாட்டரி விற்ற குளித்தலை நடுப்பட்டிப்பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்(35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து லாட்டரி,...
திருச்சியில் ரூ.15.59 லட்சம் பண மோசடி
திருச்சி,ஆக.10: திருச்சி திருவானைக்கோவில் டிரங்க் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம்(50). இவரிடம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மதிவாணன் (37) என்பவர் கோயம்புத்தூரில் ‘உழவன் காய்கறி கடை’ நடத்தி வருவதாகவும் தொழில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறினார். இவரது ஆசை வார்த்தைகளை நம்பிய ஆதிமூலம், கடந்த 2024,2025 வருடம் ரூ.11.70 லட்சம்...
மதுபாட்டில் பதுக்கி விற்ற 2 பேர் கைது
திருச்சி, ஆக.10:திருச்சியில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது செய்யப்பட்டார்.திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஆக.8ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சங்கிலியாண்டபுரம் அருகே டூவீலரில் பதுக்கி வைத்து மதுவிற்ற சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த நவலடியான் (47) என்பவரை...
வெளியூர் சென்றவரின் வீட்டில் திருட முயன்ற வாலிபர் கைது
திருச்சி, ஆக.7: திருச்சியில் வெளியூர் சென்றிருந்த பெண்ணின் வீட்டில் பூட்டை உடைத்து திருட முயன்ற வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சி பீமநகர் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அம்மாகண்ணு(62). இவர், கடந்த ஜூலை 18ம் தேதி கண் சிகிச்சைக்காக சென்னை சென்றார். அப்போது, வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை எடுத்து சென்றதாக...
