3 உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம்: கொலீஜியம் பரிந்துரை

புதுடெல்லி: உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேரை இடமாற்றம் செய்வதற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. டெல்லியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சவ் கண்ணா, பி.ஆர் கவாய், சூர்யகாந்த்மற்றும் அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் குழுவின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேறு உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி மவுசுமி பட்டாச்சார்யாவின் கோரிக்கையை கொலீஜியம் குழு ஏற்றுக்கொண்டது. பிப்ரவரி 12ம் தேதியிட்ட கடிதத்தில் நீதிபதி மவுசுமி பட்டாச்சார்யா கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக வேறு உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்ற கொலீஜியம் அவரை இடமாற்றம் செய்வதற்கு பரிந்துரை செய்தது. இதேபோல் கேரள மாநிலத்தை விட்டு இடமாற்றம் கோரி நீதிபதி அனு சிவராமன் மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி சுஜோய் பால் ஆகியோரின் இடமாற்ற கோரிக்கைகளும் ஏற்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி மவுசுமி பட்டாச்சார்யா தெலங்கானாவிற்கும், நீதிபதி அனு சிவராமனை கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கும் மற்றும் நீதிபதி சுஜோய் பால் தெலங்கானா உயர்நீதிமன்றத்துக்கும் மாற்றுவதற்கு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

Related posts

நெற்பயிரில் எலிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,567 கனஅடியாக அதிகரிப்பு!!

தேனீ வளர்க்கலாம் வாங்க!