குதிரையில் ஊர்வலம்: தலித் மணமகன் மீது தாக்குதல்

காந்திநகர்: குஜராத்தில் குதிரையில் ஊர்வலம் சென்றதற்காக தலித் மணமகனை தாக்கிய 4 பேரை கைது செய்துள்ளனர். குஜராத்தின் காந்திநகரில் உள்ள சடாசனா கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த விகாஸ் சவ்தா என்பவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக மணமகனான அவர் உறவினர்கள் 100 பேருடன் குதிரையில் மணமகள் வீட்டிற்கு ஊர்வலமாக சென்றார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த நபர், விகாஸ் சவ்தாவை குதிரையில் இருந்து கீழே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினார். மேலும் தங்களது சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் குதிரையில் வரவேண்டும் என்று கூறி சாதி ரீதியாக அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனிடையே அங்கு வந்த மேலும் 4 பேரும் விகாஸ் சவ்தாவை தாக்கி உள்ளனர். பின்னர் அவர் நான்கு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக செல்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து மணமகனின் உறவினர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

Related posts

அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜி மனு மீது 19ல் தீர்ப்பு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும்: பாஜ தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான இறுதி தேர்வு முடிவு வெளியீடு: முதல் இடத்தை பிடித்தார் மாணவி கீர்த்தனா