எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவருக்கு ஓராண்டு சிறை; 33 மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

கொழும்பு : எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், நாகையைச் சேர்ந்த 36 மீனவர்களில் 33 பேரை விடுதலை செய்துள்ளது. மேலும் 2 மீனவர்களை 6 மாதம் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மற்றும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 15 மற்றும் 17ம் தேதி ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியடித்துள்ளனர்.

அப்போது 3 படகுகள் மற்றும் 33 மீனவர்கள் ஆகியோரை சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மீனவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட 36 மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் மீண்டும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 33 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதை படகோட்டி இருவருக்கு 6 மாத சிறை தண்டனையும், 2வது முறையாக மீன்பிடித்த குற்றத்திற்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்துள்ளனர். இந்த சம்பவம் காரைக்கால் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வாக்கு சதவீதத்தில் குளறுபடி, பிரிவினையைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுகள் : I.N.D.I.A.கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் முறையீட முடிவு!!

தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 65% குறைவாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல்

கடல் சீற்றத்தால் வடசென்னையில் சாலை துண்டிப்பு..!!