சிலிக்கான் வேலி வங்கியில் ஆட்குறைப்பு நடவடிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில் பெரிய அளவில் கடன் வழங்கி வந்த சிலிக்கான் வேலி சமீபத்தில் திவாலானது. இந்த வங்கியானது பெரும்பாலும் தொழில்நுட்ப நிறுவனங்கள், வென்சர் கேபிடல் நிறுவனங்கள், மூலதனம் சார்ந்த நிறுவனங்கள், தொழில்துறையின் சிறந்து விளங்கும் பிராண்டுகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடனுதவி செய்து வந்தது. வங்கியின் படுமோசமான நிதி நிலையை அறிந்த டெபாசிட்தாரர்கள் விரைந்து தங்களது பணத்தை எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து,வங்கி திவாலானது. சிலிக்கான் வேலி வங்கியை வடக்கு கரோலினாவை சேர்ந்த பர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பாங்க் ஆப் ராலே வாங்கியுள்ளது. இந்நிலையில்,சிலிக்கான் வேலி வங்கியில் 500 ஊழியர்கள் (3 சதவீதம்) பணி நீக்கம் செய்யப்படுவார்கள். இதில்,சில குறுிப்பிட்ட பிரிவுகளை சேர்ந்தவர்கள் நீக்கப்படுவார்கள். வாடிக்கையாளர்கள் பிரிவு அல்லது வங்கியின் இந்திய கிளைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது பர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பேங்க் தெரிவித்துள்ளது.

Related posts

வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 322 கன அடியில் இருந்து 229 கன அடியாக குறைந்தது

குஜராத் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு

டெல்லி குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் பலி