குஜராத் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு

குஜராத்: குஜராத் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள டிஆர்பி விளையாட்டு மண்டலத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிறுவர்கள் உட்பட 27 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் ராஜ்கோட்டில் டிஆர்பி விளையாட்டு மண்டலம் உள்ளது. கோடை கால விடுமுறை என்பதால் சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர். அப்போது தற்காலிக கூடாரம் ஒன்றில் திடீரென தீப்பற்றியது. தீ இதர பகுதிகளுக்கும் பரவியது.

இதில் சிக்கிய சிறுவர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தையடுத்து டிஆர்பி விளையாட்டு மண்டலத்தின் உரிமையாளர் யுவ்ராஜ் சிங் சோலங்கி கைது செய்யப்பட்டார்.

Related posts

பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டித் தழுவி வாழ்த்து பரிமாறல்

மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் நடந்த ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

மராட்டிய மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நியமனம்