ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்கு வரும் 30ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழக அரசு கடந்த மார்ச் 23ம் தேதி இயற்றிய தமிழ்நாடு ஆன் லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன் லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசுத்தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, ஜூன் 4ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. வழக்கின் விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு தள்ளிவைத்திருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு இன்னும் பதில்மனு தாக்கல் செய்யவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஜூன் 30ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதை ஏற்று பதில்மனு தாக்கல் செய்ய வரும் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதிகள், ஜூலை 3ம் தேதி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Related posts

மழையின்றி வற்றிய குளங்கள்; சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்: கோடையை எளிதாக கடந்து செல்வது எப்படி?

ரெட்டியார்சத்திரம் அருகே கோயில் விழாவில் எருது விடுதல்

கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்