ரெட்டியார்சத்திரம் அருகே கோயில் விழாவில் எருது விடுதல்

ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம் அருகே காமாட்சிபுரம் கிராமம் எல்லப்பட்டியில் அமைந்துள்ள கெண்டுகாட்டம்மாள். பொம்மையை சுவாமி, மண்டு கோயில் என நான்கு தெய்வங்கள் கொண்ட கோவில் திருவிழா கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வந்தனர் .இந்நிலையில் கோவில் திருவிழாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை 14 மந்தையை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கால்நடைகளும் கலந்து கொண்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்ட எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த எருது விடும் விழாவில் கலந்து கொண்ட கால்நடைகள் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கோயில் அருகே வந்து கோவிலில் முன்பு மண்டி இட்டு வணங்குவது தான் வெற்றி என கருதிக் கொண்டு, ஊர் பொதுமக்கள் சார்பாக இவ் விழாவை சிறப்பாக நடத்தினர்.

ஐந்தாண்டுக்கு ஒரு முறை இந்த எருது விடு விழா நடைபெறுவதால் பல்வேறு மாவட்டங்களில் திருச்சி, கரூர், திண்டுக்கல்,தேனி ஆகிய ஊர்களில் இருந்தும் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் விழா குழுவினர்கள் ஊர்கவுண்டர், ஊர்பெத்தகாப்பு, தண்டபாணி, தங்கவேல்,முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் கணேஷ் பிரபு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related posts

சிவகங்கை கப்பல் நாகை வந்தது; இலங்கைக்கு 13ம் தேதி முதல் போக்குவரத்து.! நாளை சோதனை ஓட்டம்

உலக செவிலியர் நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சிபிசிஎல் நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்!