புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதை கொண்டாடும் விதமாக ரூ.75 நாணயத்தை வெளியிடவுள்ளது ஒன்றிய அரசு!

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதை கொண்டாடும் விதமாக ஒன்றிய அரசு ரூ.75 நாணயத்தை வெளியிடவுள்ளது. இந்த நாணயத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் நாடாளுமன்ற வளாகத்தின் படங்கள் இடம்பெறும் என ஒன்றிய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த திறப்பு விழாவையொட்டி ரூ.75 நாணயத்தை ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் வெளியிட உள்ளது. இந்த புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும், அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம்பெறுகிறது. நாணயத்தின் மற்றொரு புறத்தில் பாராளுமன்ற கட்டிடத்தின் படம் இடம்பெறுகிறது.

இந்த நாணயம் வட்ட வடிவத்தில் 44 மில்லிமீட்டர் சுற்றளவு, நாணயத்தை சுற்றி 200 பற்கள் அடங்கிய டிசைன் வழங்கப்படுகிறது. 35 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய நாணயம் போர்பார்ட் அலாய் மூலம் உருவாக்கப்படுகிறது.

Related posts

குற்றாலம் அருவிகள் வறண்டு காட்சி அளித்த நிலையில் தற்போது இடியுடன் மழை!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி பகுதியில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்; விவாகரத்து பெற்ற மகளை வாத்தியங்கள் முழங்க வீட்டிற்கு அழைத்து வந்த தந்தை; உத்தரபிரதேசத்தில் விநோதம்