வெளிநாடு முதலீடுகள் குறித்த ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்..!

சென்னை: சிதம்பரம் தீட்சிதர் குழந்தை திருமணம் விவகாரத்தில் விமர்சனம் செய்யாமல் முற்றுப்புள்ளி வைக்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது ஒரு குழந்தையின் எதிர்கால விஷயம், தொடர்ந்து இதுகுறித்து பேசினால் நன்றாக இருக்காது. இந்தாண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் எவ்வித பிரச்சனையும் இருக்காது. 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இன்று நல்ல முடிவு வரும். விரைவில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சர்களை சந்தித்து பேசவுள்ளோம். இந்தியாவிலேயே மாநில அரசு நடத்தும் கல்லூரிகளில் சென்னை மருத்துவ கல்லூரிதான் முதலிடம் எனவும் கூறினார். தொடர்நது தமிழகத்தின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள் சொல்கிற விமர்சனம் தான் அது என வெளிநாடு முதலீடுகள் குறித்த ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தார்.

Related posts

லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை

சாலை விபத்தில் படுகாயம் அடைந்த வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய காவலர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தமிழ்நாட்டில் வழக்கம்போல் அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது