தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தங்களது ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். பொறியியல் கலந்தாய்வுக்கு கடந்த ஆண்டை விட இந்தாண்டு 18,174 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் ஆன்லைன் மூலம் 20ம் தேதி நடைபெறுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி முதல் ஆகஸ்ட் 24 வரை நடக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

Related posts

போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

வரும் 20ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவு; நாளை மறுநாள் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.! 49 எம்பி பதவிக்கு 695 பேர் போட்டி

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு!