மீரா பயந்தர் கொலை சம்பவம் மனைவியல்ல… மகள் மாதிரி: போலீசை அதிரவைத்த கொலையாளி மனோஜ் சானே

தானே: தானேயில் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தனக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாகவும், தன்னுடன் வசித்த சரஸ்வதி தனக்கு மகள் மாதிரி என கூறி அதிர வைத்துள்ளார் மனோஜ் சானே. தானே மீரா பயந்தரில் உள்ள கீதா நகரில் உள்ள கீதா குடியிருப்பின் 7வது மாடியில், சரஸ்வதி வைத்யா (32) மற்றும் மனோஜ் சானே(56) ஆகிய இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கடந்த சில நாட்களாக அவர்கள் வசித்து வந்த 7வது மாடியில் உள்ள வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது வீட்டுக்குள் பெண்ணின் கால்கள் வெட்டப்பட்டு கிடந்தன. இரண்டு அறைகளில் உடலின் பாகங்கள் 20க்கும் மேற்பட்ட துண்டுகளாகப் போடப்பட்டு வாளிகளில் வைக்கப்பட்டிருந்தன. சமையலறையிலும் குக்கரில் வேக வைக்கப்பட்ட நிலையில் உடல் பாகங்கள் காணப்பட்டது. உடலை துண்டு துண்டாக போட்டு வேக வைத்து நாய்களுக்கு இரையாக்கியதோடு, மிக்சியில் அரைத்ததும் தெரிய வந்தது. மனோஜ் சானேயை கைது செய்து கோர்ட்அனுமதியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனோஜ் சானே மீரா பயந்தரில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றியுள்ளார். அப்போது கடைக்கு வந்த சரஸ்வதி வைத்யாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆதரவற்றவர்கள் என அறிமுகம் செய்து கொண்டுள்ளனர். அதன்பிறகு கோயிலில் திருமணம் செய்து கொண்ட சரஸ்வதி வைத்யாவும், மனோஜ் சானேயும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழத் துவங்கினர். இருவருக்கும் 24 வயது வித்தியாசம் என்பதால், மனோஜ் சானேவை தனது தாய் மாமா என்றே அக்கம் பக்கத்தினரிடம சரஸ்வதி கூறியுள்ளார். இந்தநிலையில் குடும்பத்தகராறில் சரஸ்வதியை மனோஜ் கொன்று கொடூர சம்பவங்களை அரங்கேற்றியுள்ளார்.

ஆனால், சரஸ்வதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் போலீசிடம் இருந்து தப்பிக்க சடலத்தை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினேன். எனக்கு சரஸ்வதி மகள் மாதிரி எனவும், கணவன் மனைவியாக வாழவில்லை என மனோஜ் சானே கூறினார். மேலும் தனக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது வழக்கை திசை திருப்ப அவர் மேற்கொள்ளும் உத்தியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Related posts

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் வரும் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகிறது.

5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம்: அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவிப்பு

ஏற்காடு பேருந்து விபத்து: அரசு நிவாரணம் வழங்க இபிஎஸ் கோரிக்கை!