ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்தியாவில் மோசமான வானிலைக்கு 233 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நடந்த வானிலை மாற்றம் மற்றும் சேதம் குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு: இந்தியாவில் மோசமான வானிலை மாற்றம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 27 மாநிலங்களை பாதித்தது. இந்த ஆண்டு 32 மாநிலங்களை பாதித்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் அதிகபட்ச தீவிர வானிலை நாட்கள்தலா 30, இமாச்சல பிரதேசம் 28, பீகார், மத்திய பிரதேசத்தில் தலா 27 நாட்கள் பதிவாகியுள்ளன.

டெல்லியில் கடந்த ஆண்டு 25 நாட்கள் மோசமான நாட்களாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 12 நாட்களாக பதிவாகி உள்ளது. இதனால் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 233 பேர் பலியாகி விட்டனர். 9.5 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. 2022ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் 86 பேர் பலியானார்கள். 30 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நாசம் அடைந்து இருந்தது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மின் விபத்துகளால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு

கடலூர் அருகே மாங்குளம் கிராமத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம்..!!

புதுச்சேரியில் கடல் சீற்றம்: சுற்றுலா பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் போலீசார் தடை விதிப்பு!