எண்ணூரில் கோரமண்டல் உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி 33 மீனவ கிராமங்களில் கடை அடைப்பு மற்றும் சாலைமறியல் போராட்டம்

சென்னை: எண்ணூரில் கோரமண்டல் உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி 33 மீனவ கிராமங்களில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது. மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கபட்டுள்ளனர்.

சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 42 நாட்களாக மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி நள்ளிரவில் கோரமண்டல் உரத் தொழிற்சாலைக்கு கடலில் இருந்த கப்பலில் இருந்து பைப்லைன் மூலம் அமோனியா வாயு இறக்கும் போது பைப்லைனில் கசிவு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பரவியது.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சுவாசகோளாரால் அவதிபட்டனர். இந்த அதிர்வலைகள் அந்த பகுதி முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் 27 டிச. காலை முதலே 33 மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து தினமுன் ஒவ்வொரு கிராமமாக கோரமண்டல் உர தொழிற்சாலை நுலைவாயில் முன்பாக போராத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று பசுமை தீர்பாயத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் இன்று வியாபாரிகள் சங்கதினர் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 33 மீனவ கிராம மக்களும் கடையரைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கபட்டுள்ளனர்.

Related posts

நடிகர் ரஜினிகாந்துக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்!

நாளை மறுநாள் வாக்குப்பதிவு: 6-ம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நிறைவு

கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி