கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை: காரைக்குடியில் கொப்புடையம்மன் கோயிலில் கடந்த 2015-ம் ஆண்டில் காணாமல் போன ரூ. 1கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளை மீட்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கோயிலில் விலையுர்ந்த ஆபரணங்கள் மாயமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் வேலங்குடியை சேர்ந்த பாஜக இளைஞர் அணியின் மாநில துணைத்தலைவர் துரைராஜ் எனவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தக்கல் செய்திருந்தார். அதில் காரைக்குடியில் கொப்புடையம்மன் கோயிலில் உள்ளது. இந்த கோயிலில் 1991-ம் ஆண்டு முதல் அறங்காவலர் நியமனம் செய்யப்படாமல் இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த கோயிலில் சுவாமிக்கு அணிவிக்க கூடிய ஆபரணங்கள் 2015-ம் ஆண்டு சரிபார்த்தபோது தங்கம் 189.110 கிராம், வெள்ளி 14 கிலோ, வைரகற்கள் 10 சென்ட், 5 வெள்ளை கற்கள், 1 விலையுயற்ந்த சிகப்பு கல் காணவில்லை எனவும், அன்றைய சந்தை மதிப்பின் படி ரூ.86 லட்சம் ஆகும்.

இந்த ஆபரணங்கள் மாயமானது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அணையர் இதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2015-ம் ஆண்டு கோயில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 2015-ம் ஆண்டு முதல் கோயில் செயல் அலுவலர்களாக செல்வி, அகிலாண்டேஸ்வரி, பிரதீபா, சுமதி, பழனி, மகேந்திரபூபதி, என 6 பேர் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

மாயமான நகைகள் சுமார் ரூ.1கோடிக்கு மேல் மதிப்புள்ளது. எனவே அவற்றை மீட்க வேண்டும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி: கோயிலில் விலையுர்ந்த ஆபரணங்கள் மாயமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதாக? என கேள்வியெழுப்பினார். மேலும் கோயில் சார்பில் இருந்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க வேண்டும். அதன்படி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து