கால்நடைத் தீவன ஊழல் லாலு ஜாமீனை ரத்து செய்ய சிபிஐ மனு


புதுடெல்லி: பீகாரில் கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலுபிரசாத் யாதவிற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.60 லட்சம் அபராதம் விதித்தது. இந்த வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ள லாலு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த ஜாமீனை ரத்து செய்ய கேட்டு உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ மனு தொடர்பாக வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related posts

மக்களவைத் தேர்தல் 5ம் கட்டத்தில் 62.2% வாக்குப் பதிவு

வேலூர் அருகே ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது..!

ஊட்டி மலை ரயில் ரத்து