மாநிலங்களவையில் 12 சதவீத எம்பிக்கள் கோடீஸ்வரர்கள்: ஆந்திரா, தெலங்கானாவில் அதிகம்

புதுடெல்லி: மாநிலங்களவையில் உள்ள 12 % எம்பிக்கள் கோடீஸ்வரர்கள் என்றும் இதில் ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாநிலங்களவையில் உள்ள 233 உறுப்பினர்களில் 225 பேரின் பின்னணி குறித்து ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு(ஏடிஆர்) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆந்திராவில் உள்ள 11 எம்பிக்களில் 5 பேர்(45%),தெலங்கானாவில் 7 பேரில் 3 பேர்(43%),மகாராஷ்டிராவில் 19 பேரில் 3 பேர்(16%) ,டெல்லியில் 3 பேரில் 1 (33%), பஞ்சாப்பில் 7 பேரில் 2 பேர்(20%), அரியானாவில் 5 பேரில் ஒருவர்(20%), மத்திய பிரதேசத்தில் 11 பேரில் 2 பேருக்கு(18 %) ரூ.100 கோடிக்கும் மேல் சொத்துகள் உள்ளன.

தெலங்கானாவை சேர்ந்த 7 எம்பிக்களின் சொத்து மதிப்பு ரூ.5,596 கோடி ஆகும். ஆந்திராவின் 11 எம்பிக்களுக்கு ரூ.3,823 கோடி சொத்துகள் உள்ளன. உபியின் 30 எம்பிக்களுக்கு ரூ.1,941 கோடி சொத்துகள் உள்ளன. மாநிலங்களவையில் உள்ள 75 % உறுப்பினர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளன. 41 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகளும்,2 பேர் மீது கொலை வழக்கும் நிலுவையில் உள்ளன. காங்கிரசின் கே.சி.வேணுகோபால் உட்பட 4 எம்பிக்கள் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு