ஸ்மிருதி இரானியை எதிர்த்து அமேதி தொகுதியில் மீண்டும் ராகுல் போட்டியிடுவார்: மோடியை எதிர்த்து பிரியங்கா? உபி காங்.தலைவர் அறிவிப்பு

லக்னோ: அமேதி தொகுதியில் மீண்டும் ராகுல் போட்டியிடுவார் என்று உபி காங்கிரஸ் தலைவர் அஜய்ராய் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உபி காங்கிரஸ் தலைவராக அஜய்ராய் நியமிக்கப்பட்டுள்ளார். 2019 மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் இவர் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கினார். உபி மாநில காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற பிறகு அவரிடம், அமேதி தொகுதியில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக ராகுல் மீண்டும் போட்டியிடுவாரா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அஜய்ராய் கூறுகையில்,’ ராகுல் காந்தி அமேதியில் நிச்சயமாக போட்டியிடுவார். பிரியங்கா காந்தி எங்கு வேண்டுமானாலும் போட்டியிடுவார். வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியிட விரும்பினால், அவரது வெற்றியை உறுதி செய்ய ஒவ்வொரு தொண்டனும். பாடுபடுவார்கள். அமேதி தொகுதியில் வென்ற ஸ்மிருதி இரானி உறுதியளித்தபடி ரூ.13க்கு ஒரு கிலோ சர்க்கரை கிடைக்குமா என்று அவரிடம் கேளுங்கள்’ என்றார்.

Related posts

மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பு: சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை

நிகேதன் பாடசாலை பள்ளி மாணவர்கள்; நீட் தேர்வில் சாதனை

சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் தலைமைச் செயலாளர்