ஊட்டி மலை ரயில் ரத்து


மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு 184 பயணிகளுடன் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அடர்லி – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையில் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் விழுந்ததில் தண்டவாளம் சேதமடைந்தது தெரியவந்தது.

இதை அடுத்து மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாகவும், முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தண்டவாளத்தில் விழுந்த மண் மற்றும் ராட்சத பாறைகளை அகற்றி சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து