2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு: மே 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது குஜராத் நீதிமன்றம்..!

சூரத்: 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு மே 2-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது. இதன் காரணமாக வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவரது பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில், சூரத் நீதிமன்றத்தில், ராகுல் காந்தி, தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நீக்க கோரியும், வழக்கு நடைபெறும் வரையில் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரியும் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி; பிரதமர் மோடி குறித்து பேசியதாக ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை. ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என வாதிட்டார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை மே 2ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

மாஜி அமைச்சரால் சொத்து பத்திரம் இழந்து தவிக்கும் இலை கட்சி வேட்பாளர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் ஓரிருநாளில் அறிவிப்பு: கார்கே தகவல்