ஏலியம்பேடு – புதுவாயல் செல்லும் சாலையில் 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர் தலைமறைவு

பொன்னேரி: பொன்னேரி அருகே மினி லாரியில் கடத்தி சென்ற சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஏலியம்பேடு- புதுவாயல் செல்லும் சாலையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கும்மிடிப்பூண்டியில் இருந்து புதுவாயல் வழியாக ஏலியம்பேடு ஆலமரம் பகுதியில் மினி லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த பொன்னேரி போலீசார் கையை காட்டி நிறுத்தும்படி முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்த மினிலாரி டிரைவர் லாரியை முன்கூட்டியே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார்.

போலீசார் நடத்திய சோதனையில் அதில், சுமார் 1000 கிலோ மூட்டைகள் கொண்ட ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. அதனை, பறிமுதல் செய்து பொன்னேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர், திருவள்ளூர் மாவட்ட ரேஷன் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக பொன்னேரி போலீஸ்சார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், மினி லாரியின் உரிமையாளரையும் தேடி வரும் நிலையில், தலைமறைவான டிரைவரையும் தீவிரமாக வருகின்றனர்.

Related posts

இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு இன்று பிற்பகல் கூடுகிறது!

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தனது குரலை மாற்றி வெளியிட்ட போலி விடியோவை பரப்புகின்றனர்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு