மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்:பதவியில் இருந்து விலக பாஜ எம்.பி நிபந்தனை

கோண்டா: ‘மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்ப தயார் என்றால் நான் கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து விலக தயார்’ என பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜ எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் கூறி உள்ளார்.பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் உபியை சேர்ந்த பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக வினேஷ் போகத் தலைமையில் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரிஜ் பூஷண் மீது டெல்லி போலீசார் போக்சோ உள்ளிட்ட 2 எப்ஐஆர்களை பதிவு செய்துள்ள போதிலும், அவரை அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி, கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பிரிஜ் பூஷண் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிக்காததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் ராஜினாமா செய்தால், வீராங்கனைகள் போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு சென்று நிம்மதியாக தூங்குவார்கள் என்றால் கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து விலக தயார். ஆனால் அரசியல் கட்சி ஆட்டிவைக்கும் பொம்மைகளாக வீரர், வீராங்கனைகள் உள்ளனர். இந்த போராட்டத்தின் நோக்கம், எனது ராஜினாமா அல்ல, முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே’’ என்றார்.

Related posts

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 4வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ: வனப்பகுதியில் 500 ஏக்கரில் மரங்கள் நாசம்

சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு