விமானி அறைக்குள் தோழியை அனுமதித்த விவகாரம்: ஏர்இந்தியா சிஇஒவுக்கு நோட்டீஸ்

மும்பை: விமானிகள் அறைக்குள் தோழியை அனுமதித்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு, ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி, பாதுகாப்பு தலைவர் ஆகியோருக்கு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.டாடா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானம் கடந்த பிப்ரவரி 27ம் தேதி துபாயிலிருந்து டெல்லிக்கு வந்தது. அந்த விமானத்தை இயக்கிய விமானி, தன் தோழியை ‘காக்பிட்’ எனப்படும் விமானிகளுக்கான அறைக்குள் அனுமதித்து, தன்னுடன் அமர வைத்து கொண்டு விமானத்தை இயக்கியுள்ளார். மேலும் அவருக்கு மதுபானம் தரும்படி விமான பணிப்பெண்ணுக்கு கட்டளையிட்டுள்ளார்.

இந்த விவகாரம் வௌியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பல் வில்சன், பாதுகாப்புத்துறை அதிகாரி ஹென்றி டோனோஹோவுக்கும் மார்ச் 3ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஏர் இந்தியா நிறுவனம் இதுகுறித்து விசாரிக்கவில்லை.இந்நிலையில் இதுகுறித்து விமான ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

விசாரணையின் முதற்கட்டமாக, “இந்த சம்பவத்தில் மற்ற ஊழியர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றாலும், விசாரணை முடியும் வரை சம்பவம் நடந்த அன்று அந்த விமானத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து, இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்கும்படி ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பல் வில்சன், பாதுகாப்புத்துறை அதிகாரி ஹென்றி டோனோஹோவு ஆகியோருக்கு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆயைணம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related posts

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரிப்பு; காரணங்களை அரசு கண்டறிய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

இரவு உணவுப் பிரியர்கள் கவனத்திற்கு… துரித உணவால் குறையும் மனிதர்கள் ஆயுட்காலம்: வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட உணவுகளை தேடும் இளசுகள்

வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் கட்டிட வேலைக்கு நேர கட்டுப்பாடு இல்லை: தமிழ்நாடு அரசு மறு உத்தரவு