விவிபேட் சீட்டுகளை முழுமையாக எண்ணக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை நூறு சதவீதம் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் அகர்வால் என்பவர் உட்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. நேற்று முன்தினம் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் 5 முக்கிய சந்தேகங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப நிபுணர்கள் நீதிபதிகளின் சந்தேகத்திற்கு நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

குறிப்பாக வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தவித முறைகேடும் செய்ய முடியாது என்று தெரிவித்து இருந்தனர். ஆனால் இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரம் ஆகியவை குறித்த எங்களது சந்தேகங்களுக்கு போதிய விளக்கம் கிடைத்து விட்டதாக தெரிவித்த நீதிபதிகள் தீர்ப்பை நேற்று முன்தினம் ஒத்திவைத்தனர். இதையடுத்து இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

Related posts

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று கோலாகல தொடக்கம்

குஜராத்தில் பயங்கர தீ; 24 பேர் பலி

எம்பி கொலைக்கு சதி திட்டம் தீட்டிய அமெரிக்க தொழிலதிபரை கைது செய்ய நடவடிக்கை: கைதான பெண்ணிடம் விசாரணை