ஐக்கிய ஜனதா தள தலைவர் சுட்டுக்கொலை

பாட்னா: பீகார் மாநிலம், பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த சவுரவ் குமார் மற்றும் முன்மன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு திருமண விழாவில் கலந்துகொண்ட பின்னர் நள்ளிரவில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் மீதும் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுரவ் குமார் உயிரிழந்தார். மற்றொருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

எந்த தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போகிறார் என்று இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயார் செய்ய டெண்டர்

போக்சோ வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா