விடுமுறையையொட்டி குவியும் சுற்றுலாப்பயணிகள்: தேக்கடியில் படகு சவாரிக்கு பலத்த போட்டி

கூடலூர்: கோடை விடுமுறையையொட்டி தேக்கடியில் படகு சவாரி செய்ய சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். கேரளாவில் உள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இங்கு யானை சவாரி, நேச்சர் வாக், மூங்கில் படகு சவாரி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. படகு சவாரியின்போது நீர்நிலைகளுக்கு வரும் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் பல்வேறு வகையான பறவையினங்களை காணலாம். தற்போது பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால், சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் தேக்கடிக்கு வந்து செல்கின்றனர்.

தேக்கடி ஏரியில் கேரள சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் கேரள வனத்துறை சார்பில் 6 படகுகள் இயக்கப்படுகின்றன. தேக்கடியில் நுழைவுக்கட்டணமாக ரூ.70, படகு சவாரிக்கு ரூ.385 வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு, கடந்த சில தினங்களாக சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகின்றனர். பெரும்பாலானோர் படகு சவாரி செல்ல ஆர்வம் காட்டுவதால், படகுத்துறையில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே படகு சவாரிக்கு டிக்கெட் கிடைப்பதால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

Related posts

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 வீடுகள் எரிந்து சேதம்

ஷப்பா… வெயில் தாங்க முடியல… நீர்நிலை சார்ந்த இடங்களை நாடும் சுற்றுலா பயணிகள்: திற்பரப்பு அருவி, கடலில் உற்சாக குளியல்