மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 வீடுகள் எரிந்து சேதம்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. 3 வாகனங்களின் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வத்தனர். சென்னி வீரம்பாளையம் பகுதியில் கடும் வெயிலால் காய்ந்த புற்கள் தீப்பிடித்து எரிந்து குடிசைகளுக்கு பரவியது. காற்றின் வேகத்தால் மளமளவென பற்றி எரிந்த தீ அடுத்தடுத்து 52 குடிசைகளுக்கு பரவியது. குடிசையில் இருந்த மக்கள் வேலைக்குச் சென்றுவிட்டதால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் அறிந்து வந்த வருவாய் கோட்டாட்சியர் விபத்து குறித்து நேரில் விசாரணை நடத்தினார்.

Related posts

தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!