சுற்றுலாப் பயணிகளை கவரும் மூணாறு மேளா

மூணாறு: சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் நடந்து வரும், மூணாறு மேளா உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறில் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் மூணாறு மேளா நடைபெற்று வந்தது. முன்னதாக 2012ம் ஆண்டு நடத்தப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் பல வருடங்களாக நடத்தப்படவில்லை. 11 ஆண்டு இடைவெளிக்கு பிறகு பழைய மூணாறு கேடிஎச்பி விளையாட்டு மைதானத்தில் மூணாறு மேளா கடந்த 16ம் தேதி துவங்கியது. கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் துவக்கி வைத்தார். இவ்விழாவில், 50க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், அனைத்து நாட்களிலும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் இசைக்கச்சேரி மற்றும் கேரளாவின் தனித்துவ நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. கோடை விடுமுறையில் மூணாறுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் ஈர்க்கும் வகையில் மூணாறு மேளா நடத்தப்படுகிறது. இம்மேளா வரும் 28ம் தேதி வரை நடக்கிறது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ெதரிவித்தனர்.

Related posts

தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!