மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: வடகிழக்கு மாநிலத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் மணிப்பூர் அரசை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மணிப்பூர் மலைகளில் வசிக்கும் பழங்குடியினருக்கும் இம்பால் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மையான மெய்தே சமூகத்தினருக்கும் அட்டவணைப் பழங்குடி (எஸ்டி) அந்தஸ்து கோரி நடந்த வன்முறை மோதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றதில் இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமரிவில் விசாரணைக்கு வந்தது. அப்போது வன்முறைக்குப் பிறகு நிவாரண முகாம்களில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், அங்கு தங்கியுள்ள மக்களுக்கு உணவு, ரேஷன் மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.

ஒன்றிய மற்றும் மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெனரல் துஷார் மேத்தா, வன்முறையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமை நீதிபதி அமர்வில் தெரிவித்தார். இடம் பெயர்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 23,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு ராணுவ முகாம்களிலும் நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் வன்முறை தொடர்பான மனுக்களை மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், அதற்குள் புதுப்பிக்கப்பட்ட நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை

வயநாடு தொகுதியை தொடர்ந்து ரேபரேலியிலும் ராகுல் தோற்பார்: அமித்ஷா சொல்கிறார்