வயநாடு தொகுதியை தொடர்ந்து ரேபரேலியிலும் ராகுல் தோற்பார்: அமித்ஷா சொல்கிறார்

போடேலி: ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைவார் என அமித் ஷா கணிப்பு தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்தவுடனேயே மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜவினர் பல்வேறு கருத்து கணிப்புகளை வௌியிட்டு வருகின்றனர்.

குஜராத் மாநிலம் சோட்டாடேபூர் மாவட்டத்தில் உள்ள போடேலி நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “ 2019ல் வயநாடு, அமேதி தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி அமேதியில் ஸ்மிருதி இரானியிடம் தோற்றார். இதனால் பயந்து போன ராகுல் காந்தி இந்தமுறை அமேதியில் போட்டியிடவில்லை. இப்போது வயநாடு தொகுதியிலும் தோற்று விடுவோம் என்ற பயத்தால் ரேபரேலி தொகுதிக்கு சென்று விட்டார். ஆனால் ராகுல் பாபா, நான் சொல்வதை கேளுங்கள்.ரேபரேலியிலும் நீங்கள் பெரும் வாக்கு விததிசாசத்தில் தோல்வி அடைவீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வும் பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல்

தமிழகம், கேரளாவில் மலைப்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்கவும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்