கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனை: 50 குற்றவாளிகள் கைது

சென்னை: சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில், 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 50 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 93 கிலோ 265 கிராம் கஞ்சா, 730 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 10 செல்போன்கள், ரொக்கம் ரூ.20,550, 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 12.05.2023 முதல் 18.05.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 50 குற்றவாளிகள் கைது. 93 கிலோ 265 கிராம் கஞ்சா, 730 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 10 செல்போன்கள், ரொக்கம் ரூ.20,550/-, 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல். செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக, F-5 சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், கடந்த 13.05.2023 அன்று மதியம், சூளைமேடு, கில்நகர் பூங்கா, மேற்கு நுழைவு வாயில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் உடல்வலி நிவாரண மாத்திரைகள் பெருமளவு எடுத்து வந்த கார்த்தி (எ) ஆயா கார்த்தி, வ/29, த/பெ.செல்வம், PKS பிளாட், பஜார் தெரு, மேற்கு கே.கே.நகர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 400 Nitrazepam என்ற உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் (PEW/Annanagar) தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 16.05.2023 அன்று சூளைமேடு நெடுஞ்சாலை மற்றும் நெல்சன் மாணிக்கம் ரோடு சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த ஆனந்தன், வ/23, த/பெ.ஜெயராமன், தனலஷ்மி நகர் 3வது தெரு, மதுரவாயல், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

R-10 எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், கடந்த 15.05.2023 அன்று மதியம், எம்.ஜி.ஆர்.நகர், பச்சையப்பன் தெரு, சுடுகாடு அருகில் இருசக்கர வாகனத்தில் உடல்வலி நிவாரண மாத்திரைகளை மறைத்து வைத்து ரகசியமாக விற்பனை செய்து கெண்டிருந்த 1.திவாகர், வ/24, த/பெ.சேகர், தெய்வநம்பி தெரு, சேகர், நகர், சைதாப்பேட்டை, 2.பிரவீன்குமார், வ/23, த/பெ.மணி, 2வதுதெரு, அரசு பண்ணை, சைதாப்பேட்டை, 3.சுந்தராஜன், வ/23 த/பெ.வீரதமிழ்செல்வன், 2வது தெரு, சைதாப்பேட்டை ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 330 Tapentadol என்ற உடல்வலி நிவாரண மாத்திரைகள், 1 இருசக்கர வாகனம் மற்றும் பணம் ரூ.550/- பறிமுதல் செய்யப்பட்டது.

H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 17.05.2023 காலை, புது வண்ணாரப்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அடியில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த அறிவரசன், வ/21, த/பெ.ரவி, திருப்புவனம் தாலுக்கா, சிவகங்கை மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புனித தோமையர்மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் (PEW/Mount) தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 17.05.2023 அன்று அசோக்நகர், 100 அடி சாலை சந்திப்பு அருகே கஞ்சா வைத்திருந்த பிரவாத்குமார் பிஸ்வால், வ/20, த/பெ.பிரகாஷ் பிஸ்வால், ஜெகநாத்பூர், ஒடிசா மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து15 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் (PEW/Triplecane) தலைமையிலான, காவல் குழுவினர் கடந்த 17.05.2023 அன்று பெரியமேடு, மூர்மார்கெட் வளாகத்தில் சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த கார்த்திக் சந்திரகிரி, வ/32, த/பெ.கூமா கிரி, ஓடிசா மாநிலம், என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் எதிரி கார்த்திக் சந்திரகிரி ஓடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் (PEW/Triplecane) தலைமையிலான, காவல் குழுவினர் நேற்று (18.05.2023) அன்று பெரியமேடு, மூர்மார்கெட் அருகே சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த நபினா ஹரிஜ்னா, வ/21, த/பெ.ஜகதா ஹரிஜ்னா, ஓடிசா மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10.5 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் (PEW/Adyar) தலைமையிலான, காவல் குழுவினர் நேற்று (18.05.2023) சைதாப்பேட்டை, ரயில்வே ஸ்டேஷன் அருகே சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த தண்டாயுதபாணி (எ) தணுஷ், வ/19, த/பெ.கரிகாலன், எண்.1 என்பவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து 5.1 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர், தீவிர விசாரணை மற்றும் தனிக்கவனம் செலுத்தி கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு இதுவரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 699 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,567 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு இதுவரையில் மொத்தம் 821 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

நடிகர் ரஜினிகாந்துக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்!

நாளை மறுநாள் வாக்குப்பதிவு: 6-ம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நிறைவு

கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி