ராமர் கோயிலை காண்பித்து வடமாநில மக்களையும் திசை திருப்பி வருகிறது பாஜக: மொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என்ற இறுமாப்புடன் நிற்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை அமைந்தகரையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; தாய்மொழிக்காக உலகத்தின் எந்த மூலையிலும் தமிழகத்தை போன்று போராட்டம் நடைபெற்றிருக்காது. தமிழகம் எத்தனையோ மொழிப்போர் களங்களைக் கண்டுள்ளது, மொழிப்போர் களத்தில் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் உள்பட அனைவரும் நின்றனர். 12 வயதில் இந்தி திணிப்புக்கு எதிராக களம் கண்டவர் கருணாநிதி. தாய்மொழிக்காக உலகத்தின் எந்த மூலையிலும் தமிழகத்தை போன்று போராட்டம் நடைபெற்றிருக்காது. அண்ணா முதலமைச்சராக ஒப் இருந்தபோதே தமிழ்நாட்டில் அன் இருமொழிக் கொள்கையை அமல்படுத்தினார்.

மொழி அறிவை கல்வியோடு இணைத்ததன் காரணமாக இந்தியாவிலேயே தமிழ்நாடு| உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ் மொழியை புறக்கணித்து இந்தி மொழியை திணிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கின் போது புலம்பெயர் தொழிலாளர்களை கைவிட்ட பாஜக அரசுதான் கொரோனாவை விட கொடூரமானது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகே தமிழ்நாட்டில் தமிழின் ஆட்சி தொடங்கியது . பாஜகவின் திசைதிருப்பும் முயற்சி இனியும் மக்கள் மத்தியில் எடுபடாது. இந்துக்களின் எதிரி பாஜக என்பதை அம்பலப்படுத்துவோம். இந்த முறை வடமாநிலங்களிலும் பாஜக தோல்வி அடையும். ராமர் கோயிலை காண்பித்து வடமாநில மக்களையும் திசை திருப்பி வருகிறது பாஜக எனவும் பேசியுள்ளார்.

Related posts

யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கு: குண்டர் சட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய ஆணை

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாளுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வேப்பூரில் 20 செ.மீ. மழைப்பதிவு!!