அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. ஒருசில நாட்களில் தென்மேற்கு பருவமழை ஆரம்பம்!

டெல்லி: தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக உருவானால், அதற்கு “பைபர்ஜோய் புயல்” என்று பெயர் வைக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கேரளா, தமிழ்நாட்டில் வழக்கமாக ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும். ஜூன் 6ம் தேதி ஆன நிலையில் இதுவரை தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியே தென்படவில்லை. இந்த நிலையில் அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளதால் ஒருசில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம், அரபிக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் அடுத்த 3 நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கேரளா, தெற்கு கர்நாடகாவின் உள்பகுதியில் மழைப்பொழிவுக்கு அதிக வாய்ப்புள்ளது.

Related posts

நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை

சாலை விபத்தில் படுகாயம் அடைந்த வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய காவலர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு