நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் உட்கோட்டம். இராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இராசிபுரம் அணைப்பாளையத்தை சேர்ந்த சிறுமிகள் கடந்த 2020-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக இராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் சேலத்தான் (எ) வருதராஜ் (59) மற்றும் சங்கா (எ) சிவா ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்படி வழக்கு விசாரணையானது நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று (29.04.2024) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நாமக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி முனுசாமி, பிஏ.,பில். மேற்படி குற்றவாளிகளுக்கு 40 வருட சிறைத்தண்டனை மற்றும் ரூ.4000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேற்படி வழக்கில், சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்து சிறப்பாக செயல்பட்ட இராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் கோமலவள்ளி மற்றும் காவலர்களை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

Related posts

பணியில் அலட்சியமாக இருந்த புகாரில் 2 ரோந்து காவலர்கள் பணியிடைநீக்கம்!

வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

காவிரியில் 2.5 டி.எம்.சி என்ற அளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை