புரோட்டீன் லட்டு

தேவையானவை:

வெள்ளை அவல் – ½ கப்,
பொட்டுக்கடலை – ¼ கப்,
தேங்காய்த் துருவல் – ½ கப்,
வேர்க்கடலை – ¼ கப்,
வெள்ளை எள் – 2 டேபிள் ஸ்பூன்,
துருவிய வெல்லம் – 1½ கப்,
நெய் – 2 டேபிள் ஸ்பூன்,
சீவிய பாதாம், முந்திரி – தலா 1 டீஸ்பூன்.

செய்முறை:

வெறும் வாணலியில் அவல், பொட்டுக்கடலை, எள், தேங்காய்த் துருவல் முதலியவற்றை தனித்தனியே வறுத்து ஆறியதும் வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி அனைத்தையும் போட்டு நைசாக பொடியாக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி, கம்பிப் பாகு பதம் வந்ததும் இறக்கி பொடித்து வைத்துள்ள மாவை சேர்த்து, நெய்யில் வறுத்த பாதாம், முந்திரியை போட்டு வறுத்த மாவில் கலந்து கை பொறுக்கும் சூட்டில் லட்டுகளாகப் பிடிக்கவும். மேலே பாதாம் அலங்கரித்து குழந்தைகளுக்கு மாலையில் சாப்பிட கொடுக்கலாம்.

Related posts

பருப்பு ரசம்

நுங்கு சர்பத்

நுங்கு ஸ்மூத்தி