பெரியகுளத்தில் வேளாண் புத்தாக்க தொழில் முனைவோர்களின் புதிய கண்டுபிடிப்புகள் கண்காட்சி: கலெக்டர் திறந்து வைத்தார்

 

பெரியகுளம், ஏப். 25: பெரியகுளத்தில் வேளாண் புத்தாக்க தொழில் முனைவோர்களின் புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சியினை கலெக்டர் ஷஜீவனா திறந்து வைத்தார். பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கி வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் சார்பில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதுமையான வேளாண் புத்தாக்க தொழில் முனைவோர்களின் புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமை வகித்தார் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் சஜுவனா கலந்து கொண்டு கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஷஜீவனா பேசுகையில், விவசாயத் துறைகளில் உள்ள புத்தாக்க தொழில் முனைவோர் விவசாயிகளின் பல பிரச்னைகளை தீர்க்கும் புதிய யோசனைகள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குகின்றனர். புத்தாக்க தொழில் முனைவோர்களால் உருவாக்கப்பட்ட புதுமையான தயாரிப்புகளை அனுபவிக்க விவசாயிகள் முன் வரவேண்டும். விவசாயிகள் பெரியகுளம் தோட்டக்கலை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தை அணுகி தொழில் முனைவோர் ஆதரவினை பெறலாம் என்று பேசினார். நிகழ்ச்சியின் நிறைவாக தோட்டக்கலை கல்லூரி பேராசிரியை மற்றும் தலைவர் சரஸ்வதி நன்றி கூறினார்.

Related posts

ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவன் தற்கொலை: தாம்பரம் அருகே சோகம்

தண்டையார்பேட்டையில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை: 5 பேருக்கு வலை

தனியார் கம்பெனியின் கெமிக்கல் தொட்டியில் விழுந்த ஊழியர் பலி