பெரம்பலூரில் கோடைகால சிறப்பு சித்த மருத்துவ முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

 

பெரம்பலூர்: பெரம்ப லூரில் கோடைகால சிறப்பு சித்த மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாபெரும் இலவச கோடைகால சிறப்பு சித்த மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேற்று (24ம்தேதி) தொடங்கிவைத்துப் பேசியதாவது: நமது முன்னோர்கள் பல்வேறு சிறு தானிய உணவு கள்வகைகளை உட்கொண் டதன் காரணமாக நீண்ட நா ட்கள் நோயின்றி வாழ்ந்து வந்தனர். மண்பானையில் நீர் அருந்துவது நீர் ஆகாரம் அதிகமாக எடுத்துக் கொள் வது, சிறுதானிய உணவு போன்ற பல்வேறு உணவு பழக்கங்களைக் கையாண் டு கோடை காலங்களை நமது முன்னோர்கள் மிக சிறப்பாக கையாண்டனர்.

நம் முன்னோர்கள் கையா ண்ட வழிமுறைகளை நாம் பின்பற்றி கோடை காலங்க ளை எந்த விதமான உடல் பாதிப்பும் இன்றி சுலபமாக கடந்து செல்லலாம் எனத் தெரிவித்தார். இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்து வம் மற்றும் இயற்கை யோ கா மருத்துவத்தின் சார் பாக கோடைகால உணவு கள் கோடைகால நோய்க ளைத் தீர்க்கக் கூடிய மருந் துகள் மற்றும் நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடிய இயற்கை பொருட்களின் நன்மைகள் குறித்தும் அதை எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சி யினை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

மேலும் பொது மக்களுக்கு இலவச மூலிகை கன்றுகள் வழங்கப்பட்டது. முகாமில் பங்கு கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவத்திற்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தை மாவட்டக் கலெக்டர்வழங்கினார். முகா மில் மாவட்ட சித்த மருத்து வ அலுவலர் மரு.காமராஜ், மருத்துவமனைக் கண்கா ணிப்பாளர் அர்ஜுனன், இ ருக்கை மருத்துவ அலுவ லர் மருத்துவர் சரவணன், உதவி சித்த மருத்துவ அலு வலர்கள் மருத்துவர் விஜ யன்,மருத்துவர் செந்தமிழ் ச்செல்வி, மருத்துவர் கற்ப கம், மருத்துவர் கலைச்செ ல்வி, ஹோமியோபதி உத வி மருத்துவ அலுவலர் மரு த்துவர் ராகுல்ஜி, இயற்கை யோகா மருத்துவ உதவி அலுவலர் மருத்துவர் கலை வாணி உள்ளிட்ட பலர் கல ந்து கொண்டனர்.

Related posts

தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்த மாணவன் மீட்பு

493 மதிப்பெண் பெற்று அன்பில் அரசு மாணவி அசத்தல்

விளையாட்டு விடுதிக்கு மாணவர்கள் தேர்வு