விளையாட்டு விடுதிக்கு மாணவர்கள் தேர்வு

திருச்சி. மே 11: திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று முதல் விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான ஆள்தேர்வு நடைபெற்றது. அதில் திருச்சி மாவட்ட விளையாட்டு பள்ளி விடுதியில் தங்கி பயின்று வரும், 7,8,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கான ஆள்தேர்வு நடைபெற்றது. கைப்பந்து, தடகளம், ஹாக்கி, நீச்சல், கபடி, கால்பந்து, கிரிக்கெட், உள்ளிட்ட 9 வகையான விளையாட்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 143 பேர் பங்கேற்றனர்.

அதேபோல் இன்று பெண்கள் விளையாட்டு விடுதியில் இருந்து ஆள்தேர்வு நடைபெறுகிறது. இதில் சுமார் 100பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்பட்டு, அடுத்தடுத்து நடைபெறும் மாவட்ட, மண்டல, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Related posts

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு

ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்