நியோமேக்ஸ் சொத்துகள்: போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: நியோமேக்ஸ் நிதி நிறுவன இயக்குநர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யக் கோரிய வழக்கில் போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. உள்துறை செயலாளர், டிஜிபி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அதிக வட்டி தருவதாக பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. சிவகங்கையைச் சேர்ந்த நடராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு