ரேஷன் கடைகளில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும்: கூட்டுறவுத்துறை உத்தரவு

சென்னை: ரேஷன் கடைகளில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறக்க ஊழியர்களுக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. சென்னை மற்றும் புறநகரில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும். சென்னை மற்றும் புறநகரில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும் என்று கூட்டுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்