வெளிநாடு சுற்றுப்பயணம்: ஜூன் 5ம் தேதி நடைபெறும் கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்கமாட்டார் என தகவல்

டெல்லி: குடியரசு தலைவர் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வதால் வரும் 5-ம் தேதி நடைபெறும் கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டியில் கிங் மருத்துவமனை அருகில் பலகோடி ரூபாய் செலவில் கலைஞர் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை என்ற பெயரில் இதற்கான திறப்பு விழா அழைப்பிதழை கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லிக்கு நேரடியாக சென்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அளித்தார்.

மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்கும்படி கேட்டுக்கொண்டார். அச்சமயம் தேதி உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு செய்தியாளர் சந்திப்பில் ஜூன் 5ம் தேதி குடியரசு தலைவர் முர்மு தமிழகம் வருவதை அறிவித்தனர். இந்நிலையில் கரீபியன் தீவுகளில் 5ம் தேதியில் குடியரசு தலைவர் இருப்பதால் கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை தமிழக அரசின் சுகாதாரத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, குடியரசு தலைவரை வைத்து வேறு தேதியில் திறக்கலாமா அல்லது வேறு தலைவரை அழைக்கலாமா என்று அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை!

பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு அவரது தாத்தா தேவகவுடா எச்சரிக்கை

சமத்துவ இந்தியா உருவாக I.N.D.I.A.கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் : சோனியா காந்தி பேச்சு