இந்தியா-இலங்கை ராணுவ கண்காட்சி

கொழும்பு: முதல் முறையாக இந்தியா- இலங்கை இடையேயான ராணுவ கருத்தரங்கு மற்றும் கண்காட்சிக்கு இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கண்காட்சியில் இந்திய ராணுவ தொழில்துறை, இலங்கை தொழில்முனைவோர், இலங்கை ஆயுத படை, போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் பங்கேற்றனர். இரு நாட்டு ராணுவ உபகரணங்கள் உற்பத்தி திறன்களை எடுத்துகாட்டும் வகையிலான கருத்தரங்கு நடைபெற்றது. மேலும் பல்வேறு வகையான ராணுவ தயாரிப்புக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இலங்கை உடனான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Related posts

விழுப்புரம் இணை சார்-பதிவாளர் வீட்டில் சோதனை

நாமக்கல் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ. மழை பதிவு!

இந்து மத நம்பிக்கையை மம்தா அரசு புண்படுத்துகிறது: பிரதமர் மோடி பேச்சு