அடுக்குமாடி குடியிருப்பு.. அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் தரைதள உரிமை உண்டு: CMDA-க்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

சென்னை: அடுக்குமாடி கட்டுமான விதிகளின் படி தரைதள உரிமை அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் உள்ளது என்பதை பெருநகர வளர்ச்சி குழுமம் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெசன்ட் நகரை சேர்ந்த அஸ்வின் வர்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பெசன்ட் நகரில் ரமணியம் ஸ்வர்ணமுகி என்ற அடுக்குமாடி குடியிருப்பை கட்டுமான நிறுவனம் போதுமான தரைதள வசதி இல்லாமல் விதிகளை மீறி கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கட்டமான நிறுவனம் சார்பில் எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை, பெருநகர வளர்ச்சி குழும விதிகளின் படி கட்டுமானங்கள் முடிந்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முரளி குமரன், தரைதள கட்டுமான விதிப்படி, கட்டிட உரிமையாளர்களுக்கு போதுமான இடங்கள் ஒதுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், விதிகளின் படி தரைதள உரிமை அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். சட்டவிரோத கட்டுமானங்கள் இருந்தால் அவற்றை அகற்றி அனைத்து கட்டிட உரிமையாளர்களின் பொது பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருநகர் வளர்ச்சி குழுமத்துக்கு உத்தரவிட்டனர்.

Related posts

பாக்ட் நிறுவனத்தில் 98 அப்ரன்டிஸ்கள் ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு

மாவட்ட நீதிமன்றத்தில் 106 காலியிடங்கள்

திருவண்ணாமலையில் 2வது நாளாக இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: தரிசனத்திற்காக 5 மணிநேரம் காத்திருப்பு