மாவட்ட நீதிமன்றத்தில் 106 காலியிடங்கள்

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 106 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. Cleanliness Worker : 7 இடங்கள்.
2. Watchman/Night Watchman : 39 இடங்கள்.
3. Night Watchman- Masalchi : 1 இடம்.
4. Watchman- Masalchi : 1 இடம்.
5. Masalchi : 28 இடங்கள்.பணி எண்: 1 லிருந்து 5க்கான சம்பளம்: ரூ.15,700- 58,100. தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
6. Driver : 1 இடம். சம்பளம்: ரூ.19,500-71,900. தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. Examiner : 5 இடங்கள்.
8. Reader : 1 இடம்.
9. Senior Bailiff : 7 இடங்கள்.பணி எண் 7,8,9க்கான சம்பளம்: ரூ.19,500- 71,900. தகுதி: குறைந்தது 10ம் வகுப்பு தேர்ச்சி.
10. Process Server: 6 இடங்கள். சம்பளம்: ரூ.16,600-60,800. தகுதி: குறைந்தது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
11. Office Assistant: 10 இடங்கள். சம்பளம்: ரூ.15,700- 58,100. தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கான வயது: 01.07. 2024 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், பிற்பட்டோர்/ மிகவும் பிற்பட்டோர்/ முஸ்லிம்/ சீர்மரபினருக்கு 2 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.05.2024.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு