பாக்ட் நிறுவனத்தில் 98 அப்ரன்டிஸ்கள் ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு

பயிற்சி: Trade Apprentice. மொத்த காலியிடங்கள்: 98.
உதவித் தொகை: மாதம் ரூ.7 ஆயிரம்.
வயது 01.04.2024 தேதியின்படி 23க்குள்.

அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள் மற்றும் காலியிடங்கள் விவரம்:

Fitter- 24, Machinist-8, Electrician-15, Plumber-4, Mechanic Motor Vehicle-6, Carpenter-2, Mechanic (Diesel)- 4, Instrument Mechanic-12, Welder (Gas & Electric)-9, Painter-2, COPA/ Front Office Assistant-12.
தகுதி: அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள் ஏதாவது ஒன்றில் ஐடிஐ படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினர் குறைந்தது 50% மதிப்பெண்களும், இதர பிரிவினர்கள் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்று ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய கல்வித்தகுதியை முன்பதிவு செய்து கொள்ளவும். விண்ணப்பிக்கும் விவரங்களை www.fact.co.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.05.2024.

Related posts

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து