சிட்ரான் சி3 டர்போ

சிட்ரான் இந்தியா நிறுவனம், துவக்க நிலை ஹேட்ச்பேக் காராக சிட்ரான் சி3 டர்போவை அறிமுகம் செய்துள்ளது. இதில், புதிய சுற்றுச்சூழல் விதிகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட பிஎஸ்6 பேஸ்2 இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இரண்டு விதமான இன்ஜின் தேர்வுகள் உள்ளன. 1.2 லிட்டர் 3 சிலிண்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமக 82 எச்பி பவரையும் 115 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுபோல் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

இரண்டு இன்ஜின்களுமே பிஎஸ்6 பேஸ் 2 தர விதிகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவை எனவும், லிட்டருக்கு 19.3 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பீல், ஷைன் என 2 வேரியண்ட்கள் உள்ளன. பீல் டூயல் டோன் ஷோரூம் துவக்க விலையாக சுமார் ரூ.8.28 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் வைப் பேக் வேரியண்ட் சுமார் ரூ.8.43 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஷைன் டூயல் டோன் சுமார் ரூ.8.8 லட்சம், வைப் பேக் சுமார் ரூ.8.92 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 13 புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. வேரியண்ட்களுக்கு ஏற்ப இது மாறுபடும்.

Related posts

கேரளா புதிய அணை கட்டுவதை தடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தங்கம் வாங்க நல்ல நேரம்… ஒரு சவரன் ரூ. 53,200க்கு விற்பனை.. கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.2000 விலை குறைந்தது!!

சென்னையில் வாகன தணிக்கையின்போது 850 போதை மாத்திரைகள் பறிமுதல்