சித்தூர் மாநகராட்சியில் நாள்தோறும் குப்பை கழிவுகளை இருமுறை சேகரிக்க வேண்டும்-ஆணையாளர் உத்தரவு

சித்தூர் : சித்தூர் மாநகராட்சியில் நாள்தோறும் குப்பை கழிவுகளை இருமுறை சேகரிக்க வேண்டும் என்று ஆணையாளர் அருணா உத்தரவிட்டுள்ளார். சித்தூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், எம்எஸ்ஆர் சர்க்கிள், ஐரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் நேற்று அருணா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:

சித்தூர் மாநகரத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும். முக்கிய பகுதிகளில் காலை 6 மணிக்குள் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்ய வேண்டும். நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்க வேண்டும். அப்போது மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து கொட்ட வேண்டும். அசுத்தமாக உள்ள பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். அப்போது தான் நோய் தொற்று பரவாமல் இருக்கும்.

அதிகாரிகள் நாள்தோறும் ஒவ்வொரு பகுதியாக சென்று குப்பை கழிவுகளை அகற்றி உள்ளார்களா? மற்றும் தெருக்களை சுத்தமாக வைத்துள்ளார்களா? என்று ஆய்வு செய்ய வேண்டும். நாள்தோறும் குப்பை கழிவுகளை காலை மற்றும் மாலை என இரு முறை சேகரிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.ஆய்வின்போது மாநகராட்சி தூய்மை பணியாளர் துறை அதிகாரி ராமகிருஷ்ணன் மற்றும் துறை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related posts

களைகட்ட போகும் கோடை சீசன் ஊட்டியில் மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடக்கம்

பர்கூர் அருகே சோகம் டூவீலர்கள் மீது கார் மோதியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலி

திருச்செங்கோடு அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.1.17 கோடி மோசடி கிளார்க், செயலாளர் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை